You are in the desired Language

Monday, January 19, 2015

இணைய வழி புத்தக விற்பனை நிறுவனம்

வா புத்தகங்கள் எனும் இந்த இணைய வழி புத்தக விற்பனை நிறுவனம் 
     
வா புத்தகங்கள் எனும் இந்த இணைய வழி புத்தக விற்பனை நிறுவனம்

காலவெள்ளத்தை தாண்டி நிற்க்கும் தமிழ் புத்தகங்களை உங்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்கிறது.

தமிழ் மொழிப்பணி ஆற்றிவரும் தமிழ்மண் பதிப்பகதின் புத்தகங்களை இங்கு வாங்கலாம்.

நண்பர்கள் அனைவரும் இந்த தகவல்களை அனைத்து நண்பர்களிடமும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தகவல் :

Friday, January 9, 2015

கருமுட்டையிலுள்ள ஸ்டெம்ஸ் செல்கள் மூலம் மீண்டும் பார்வை:

பார்வையை இழந்தவர்களுக்கு கரு முட்டையிலுள்ள ஸ்டெம் செல்களை பயன்படுத்தி மீண்டும் பார்வையை ஏற்படுத்த முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் வயதின் மூப்பு அடிப்படையில் கண்பார்வையை இழக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த முறை வெற்றியளிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான பார்வைக் குறைபாடு உடைய 18 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது.

இவர்களுக்கு மனித கருமுட்டையிலுள்ள ஸ்டெம்ஸ் செல்களை மாற்றீடு செய்ததன் மூலம் படிப்படியாக பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

- See more at: http://www.tamilula.com/sci-tec/59/article/Eyesight-413#sthash.oVHWr4kk.dpuf

Thursday, January 8, 2015

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்:

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

Sunday, January 4, 2015

Free Memory Improve Master – கணினியின் Memory அதிகரிக்கும் இலவச மென்பொருள்

நம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் RAM முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம்.  அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணினியின் வேகம் memory அதிகமாக உபயோகப்படுத்தப்படும். நம் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இந்த குறைகளை தீர்க்கவே இந்த பதிவு.
இந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும் உங்கள் கணினியில் நீங்கள் எத்தனை programe ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் memory கட்டுப்படுத்தி உங்கள் கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்துக் கொள்ளும்.   இந்த மென்பொருளை நீங்கள் Download செய்ய http://www.box.com/shared/05v35tvo0q
Download செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup file வந்திருக்கும். அதை இரண்டு முறை click செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
இதில் ஐந்து  வகையான பிரிவுகள்  நமக்கு தெரியும்.
  • Information Overview
  • Memory Optimization
  • System Tuneup
  • Process Management
  • Configuration and Settings – என்ற பிரிவுகள் காணப்படும்.
Information Overview :
 இந்த button click செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதைப் போல window வரும்.
இந்தப் பிரிவில் நம் கணினி இப்பொழுது எவ்வளவு memory உபயோகப்படுத்தப்படுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த window-வில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு memory காலியாக உள்ளது என்று அர்த்தம்.
Memory Optimization 
இந்தப் பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
  • இந்த window-வில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும். இவை இரண்டுமே நம் கணினியின் memory-ஐ கட்டுப்படுத்த உதவும் வசதிகளாகும்.
  • இதில் உள்ள Fast Free என்பதை click செய்தால் உங்களுக்கு கீழே ஒரு message window வரும்.
  • அதில் உங்களுடைய கணினி இதற்கு முன்னர் எவ்வளவு memory உபயோகித்தது, இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு memory-ஐ கட்டுப்படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.
 
  • இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணினியின் memory-ஐ கட்டுபடுத்தும்.
  • இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free everyஎன்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள்.
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரி செய்வதர்க்கும், நம் கணினியில் எந்த file-கள் எவ்வளவு memory உபயோகித்துக் கொள்கிறது போன்ற தகவல்கள் கண்டிப்பாக உங்கள் கணினி முன்பை விட வேகமாக இயங்கும்.

ஓவியம் வரைவதற்கு மென்பொருள்

கணினியில் ஓவியம் வரைவதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் ஓவியம் வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்களில் ஒன்று Smooth Draw ஆகும். இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளவும்.
இதில் பேனா (Pen), பென்சில் (Pencil), வாட்டர் கலர் (Water Colour), ஏர் ஸ்பிரே (Air Spray) எனப் பல்வேறு விதமான brushes கொடுக்கப்பட்டுள்ளன.
Photoshop போன்ற முன்னணி மென்பொருள்களில் உள்ள Blur, Sharpness, Burn, Smudge  டூல்களும் லேயர் வசதியும் இதில் உள்ளது.
எளிய தோற்றமும், எவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்ட இம்மென்பொருளில் வரைந்த படங்களை JPEG, PNG, TIFF, BMP, GIFF உட்பட முன்னணி படக் கோப்பு வடிவங்களாக சேமிக்க முடியும்.
மென்பொருள் பதிவிறக்கம் செய்ய – http://www.smoothdraw.com/

புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு ஒரு மென்பொருள் இலவசமாக

புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். இதற்கு Fast Stone Photo Resizer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. குறிப்பாக படங்கள் அனைத்தையும் ஒரே அளவிற்கு மாற்றிவிடுவதன் மூலம் அனைவரையும் ஈர்க்கலாம். இது support செய்யும் பைல்கள் JPEG, BMP, GIF, PNG, TIFF and JPEG2000.

அதுபோலவே வீட்டு விஷேசங்கள் போன்றவைகளுக்கு எடுத்தப் படங்களையும் இம்மென்பொருள் துணைகொண்டு படங்களை வேண்டிய அளவிற்கு சுருக்கி அல்லது விரித்து தேவையான பெயர் கொடுத்து மாற்றி சேமித்துக் கொள்ள முடியும்.
இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒவ்வொரு படமாக Photoshop போன்ற மென்பொருள்களில் திறந்து அதை edit  செய்வதைக் காட்டிலும் இம்மென்பொருளைக் கொண்டு ஒரு கோப்பறையில் உள்ள புகைப்படங்கள் அனைத்தையும் வேண்டிய அளவிற்கு மாற்றி நாம் சேமித்துக்கொள்ளலாம்.
உதாரணமாக உங்களுக்கு ஒரு Photo Gallery அமைப்பதற்கு 500X400 px அளவிற்கு படங்கள்(images) வேண்டும் எனில் உங்களிடம் உள்ள புகைப்படங்களையோ அல்லது இணையத்தில் எடுத்த புகைப்படங்களையோ ஒரு பொதுவான கோப்பறை ஒன்றை உருவாக்கி அதில் போட்டு வையுங்கள்.
பிறகு இம்மென்பொருளை open செய்ததும் தோன்றும் window-வில் புகைப்படங்கள் அடங்கிய கோப்பறையை தேர்ந்தெடுத்து புகைப்படங்களின் அளவுகளை(500pxX400px) கொடுத்து ok கொடுத்தால் போதும்.
மென்பொருளை தரவிரக்கம் செய்ய – http://www.faststone.org/FSResizerDetail.htm
thanksto: http://www.techtamil.com/

இணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வைப்பதற்கு

இணையம் பல வழிகளை நன்மையை தருகின்ற போதிலும், சில நேரங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறான  வேளையில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இணையத்தை நிறுத்தி வைக்கலாம்.
அதற்கு FocalFilter என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளவும். இந்த மென்பொருள் இயங்குவதற்கு Microsoft’s .NET Framework கணினியில் நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும்.
1. FocalFilterஐ செயற்படுத்தி அதில் காணப்படும் Edit my Site List என்பதை அழுத்தவும்.
2. அதன்பின் தோன்றும் window-வில் முடக்குவதற்கு விரும்பும் இணையத்தளங்களின் முகரிகளை கொடுத்து Save செய்யவும்.
3. பின்னர் தோன்றும் window-வில் Block for என்பதற்கு அருகில் காணப்படும் pop up மெனுவை அழுத்தி நேரத்தை தெரிவு செய்து Block my Site List என்பதை அழுத்தவும். இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய – http://www.focalfilter.com/
Thanksto:http://www.techtamil.com/

Saturday, January 3, 2015

இப்பொழுது கணினி போல டிஜிட்டல் வீட்டையும் Hack செய்ய முடியும்!

வீட்டிற்கு வரும் முன்னரே Ac யை இயக்கி வீட்டை குளிரச் செய்வது, தானாக திறக்கும் கதவு, கை தட்டினால் அணையும் விளக்கு, குழந்தைகளை கண்காணிக்கும் சிறிய வெப் கேமரா , வீட்டின் wifi இணைப்பு என மேலை நாடுகளில் இதுபோன்ற உபகரணங்கள் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது.
சமீபத்தில், குழந்தைகளை கண்காணிக்க வீடுகளில் , பொம்மைகளில் வைக்கப்பட்ட வெப் காமிராக்களை ரசிய நாட்டு ஹேக்கர்கள் ஊடுருவி Live Streaming செய்து ஒரு பொதுவான வீடியோ தளத்தில் தெரியுமாறு செய்துவிட்டனர்.
வீட்டினுள் நடக்கும் விஷயங்கள் கிரிகெட் மேட்ச் மாதிரி live ஆ வெளியே தெரிந்தால் என்ன ஆவது? இந்த ஊடுருவலை மக்கள் விழிப்புணர்வு பெறவே தாங்கள் நடத்தியதாகவும். பலரும் தங்கள் மோடமின் Default Password ஐ மாற்றுவதில்லை., அல்லது யுகிக்ககூடிய எளிமையான கடவுச்சொல்லை வைக்கிறார்கள். இதே தகவலை பிரபல ஆன்ட்டி-வைரஸ் avast நிறுவன அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
இணையத்துடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் வீட்டுக் கருவிகள் புதிது புதிதாக தினமும் கிக் ஸ்டார்ட்டர் (KickStarter) இணைய தளத்தில் கண்டுபிடித்து வெளியிடுகிறார்கள். அதிகமாக டிஜிட்டல் வீட்டுக் கருவிகள் வரும் போது அதை பாதுக்காக்கும் நடவடிக்கையும் நாம் எடுக்க வேண்டும்.
எல்லாம் சரி தான்., பல ஆன்ட்டி-வைரஸ் நிறுவனங்கள் தாங்களே வைரஸ் மென்பொருள்களை பரவவிட்டு, அதை அளிக்கும் மென் பொருளை விற்பது நமக்குத் தெரியும். இந்த டிஜிட்டல் வீட்டை பாதுகாக்க எங்களிடம் ஒரு தயாரிப்பு உள்ளது என புதிய சந்தையை இவர்கள் உருவாக்க உள்ளடி வேலை செய்கிறார்களோ என டெக் தமிழ் சந்தேகப்படுகிறது.

​வ.உ.சியும் அமெரிக்க உபெர் கால் டாக்சி சேவையும்.

சாதாரணமாக ஒரு கால் டாக்சி, ஆட்டோ ரிக்சா பிடித்து ஒரு இடத்திற்கு செல்வது இப்பொழுது மிகவும் எளிது. தடுக்கி விழுந்தா நம்மை தூக்கவோ , இடிக்கவோ ரோட்டில் ஆட்டோ அல்லது கால்டாக்சி கண்டிப்பாக இருக்கும்.
அமெரிக்காவில் இதுபோல் எண்ணற்ற கால்டாக்சி சேவை நிறுவனங்கள் உள்ளன. அவை அனைத்தையும் ஒரு ஐபோன் அப்ப்ளிகேசன் தூக்கி சாப்பிட்டுவிட்டது அதன் பெயர் தான் “உபெர்” (UBER)  வெகு விரைவாக புக் செய்த கால் டாக்ஸி உங்களை பிக்கப் பண்ண வரும் என்ற வாசகத்துடன் , தொழில்நுட்ப திறன்களுடன் இந்த அப் வெளியிடப்பட்டது. குறைந்த காலகட்டத்தில் சுமார் 50 நாடுகளில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் உபெர் நிறுவனத்துடன் இணைந்து ஓட்டி வருகின்றனர்.
சமீபத்தில், இந்தியாவில் சென்னை உட்பட 11 நகரங்களில் தனது சேவையை துவங்கியுள்ள உபெர், இந்தியாவில் உள்ள தனது இருவகையான போட்டியாளர்களை சமாளிக்க பிரிட்டிஷ் கால தொழில் போட்டி முறையை கையாளுகிறது.
uber_seo_car

1. பிற மொபைல் கால்டாக்சி மென்பொருள்கள்
மக்கள் உபெர் மென்பொருளைத் தான் கால் டாக்சி புக் செய்ய பயன்படுத்த வேண்டும் என்பதற்காக. ஒருவர் அவரின் Credit Cardஐ “உபெர் வாலெட்” இல் சேமித்து வைத்தால் ரூபாய் 300 மதிப்பில், முதல் ஐந்து புக்கிங்களுக்கு விலைச் சலுகை வழங்குகிறது.
2. பிற நிறுவன கால் டாக்சி ஓட்டுனர்கள்
வாகன ஓட்டுனர்கள் தங்களின் கைபேசி மென்பொருளை எப்பொழுதும் திறந்தே வைத்திருப்பதற்கு ரொக்க ஊக்கத் தொகையை வழங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விரைவில் உபெரின் நேரடி வாகன ஓட்டிகளாக மாறுவர்.
3. அனைத்து நிறுவனங்களையும் விட விலையைக் குறைத்தல்
சொல்லப் போனால்., இந்தியாவில் மிகவும் விலையைக் குறைத்து  வேண்டுமென்றே உபெர் தனது கால் டாக்சி சேவையை நட்டத்தில் நடத்தி வருகிறது. இந்த குறைந்த விலை சலுகைகளால் மக்களிடம் உபெர் எனும் பெயர் பிரபலாமாக போய்ச் சேரும் எனும் ஒரே காரணத்திற்காக அதிக பணத்தை செலவு செய்கிறது. இந்திய நிறுவனங்களை முழுமையாக இந்த தொழிலில் இருந்து அப்புறப்படுத்தி தானே ஒரே பெரிய கால்டாக்சி நிறுவனமாக இருக்க பல முயற்சிகள் செய்து வருகிறது. முதலீடு பெற்று அதிக சலுகைகளை வழங்கும் இணைய வர்த்தக நிறுவனங்களைப் பற்றி நான் ஏற்கனவே டெக் தமிழில் எழுதியுள்ளேன். கடந்த ஜூன் மாதம் 7200 கோடி ருபாய் முதலீடு பெற்ற இந்த நிறுவனம் , அமெரிக்காவிற்கு அடுத்த இரண்டாம் இடத்தில உள்ள இந்திய கால்டாக்சி சந்தையைப் பிடிக்க தனது முதலீட்டை தண்ணி போல் செலவு செய்து வருகிறது.
ஐபோன் , ஆண்ட்ரைடு , விண்டோஸ் கைபேசிகளில் உபெர் அப்ப்ளிகேசன் நிறுவிக்கொள்ளலாம். விரைவில் அதிக இந்திய / தமிழக நகரங்கள் மற்றும் டெபிட்கார்டு , நெட் பாங்கிங் வகை பணப் பரிமாற்றமும் மென்பொருளில் உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.



Thanks to : http://www.techtamil.com/