You are in the desired Language

Showing posts with label புதிய தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label புதிய தொழில்நுட்பம். Show all posts

Sunday, January 4, 2015

இணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வைப்பதற்கு

இணையம் பல வழிகளை நன்மையை தருகின்ற போதிலும், சில நேரங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறான  வேளையில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இணையத்தை நிறுத்தி வைக்கலாம்.
அதற்கு FocalFilter என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளவும். இந்த மென்பொருள் இயங்குவதற்கு Microsoft’s .NET Framework கணினியில் நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும்.
1. FocalFilterஐ செயற்படுத்தி அதில் காணப்படும் Edit my Site List என்பதை அழுத்தவும்.
2. அதன்பின் தோன்றும் window-வில் முடக்குவதற்கு விரும்பும் இணையத்தளங்களின் முகரிகளை கொடுத்து Save செய்யவும்.
3. பின்னர் தோன்றும் window-வில் Block for என்பதற்கு அருகில் காணப்படும் pop up மெனுவை அழுத்தி நேரத்தை தெரிவு செய்து Block my Site List என்பதை அழுத்தவும். இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய – http://www.focalfilter.com/
Thanksto:http://www.techtamil.com/

Saturday, January 3, 2015

இப்பொழுது கணினி போல டிஜிட்டல் வீட்டையும் Hack செய்ய முடியும்!

வீட்டிற்கு வரும் முன்னரே Ac யை இயக்கி வீட்டை குளிரச் செய்வது, தானாக திறக்கும் கதவு, கை தட்டினால் அணையும் விளக்கு, குழந்தைகளை கண்காணிக்கும் சிறிய வெப் கேமரா , வீட்டின் wifi இணைப்பு என மேலை நாடுகளில் இதுபோன்ற உபகரணங்கள் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது.
சமீபத்தில், குழந்தைகளை கண்காணிக்க வீடுகளில் , பொம்மைகளில் வைக்கப்பட்ட வெப் காமிராக்களை ரசிய நாட்டு ஹேக்கர்கள் ஊடுருவி Live Streaming செய்து ஒரு பொதுவான வீடியோ தளத்தில் தெரியுமாறு செய்துவிட்டனர்.
வீட்டினுள் நடக்கும் விஷயங்கள் கிரிகெட் மேட்ச் மாதிரி live ஆ வெளியே தெரிந்தால் என்ன ஆவது? இந்த ஊடுருவலை மக்கள் விழிப்புணர்வு பெறவே தாங்கள் நடத்தியதாகவும். பலரும் தங்கள் மோடமின் Default Password ஐ மாற்றுவதில்லை., அல்லது யுகிக்ககூடிய எளிமையான கடவுச்சொல்லை வைக்கிறார்கள். இதே தகவலை பிரபல ஆன்ட்டி-வைரஸ் avast நிறுவன அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
இணையத்துடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் வீட்டுக் கருவிகள் புதிது புதிதாக தினமும் கிக் ஸ்டார்ட்டர் (KickStarter) இணைய தளத்தில் கண்டுபிடித்து வெளியிடுகிறார்கள். அதிகமாக டிஜிட்டல் வீட்டுக் கருவிகள் வரும் போது அதை பாதுக்காக்கும் நடவடிக்கையும் நாம் எடுக்க வேண்டும்.
எல்லாம் சரி தான்., பல ஆன்ட்டி-வைரஸ் நிறுவனங்கள் தாங்களே வைரஸ் மென்பொருள்களை பரவவிட்டு, அதை அளிக்கும் மென் பொருளை விற்பது நமக்குத் தெரியும். இந்த டிஜிட்டல் வீட்டை பாதுகாக்க எங்களிடம் ஒரு தயாரிப்பு உள்ளது என புதிய சந்தையை இவர்கள் உருவாக்க உள்ளடி வேலை செய்கிறார்களோ என டெக் தமிழ் சந்தேகப்படுகிறது.

Thursday, December 25, 2014

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய..

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.


குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா. இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.இதற்கு

1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2. இப்போது www.spypig.com  இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.

3. முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்கள்.

4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image (Firefox) & Copy(IE)" சொடுக்கி copy செய்யவும்.

5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.

நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.